நான்காவது முறையாக காங். தலைவரானார் சோனியா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு


போட்டி வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல், வருகிற 17 ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சோனியா காந்தியின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.சோனியா காந்தியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், அவர் தொடர்ந்து 4 ஆவது முறையாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் சிறிய உரை நிகழ்த்திய சோனியா, தம்மை கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தம்மீது மிகப்பெரிய பொறுப்பை மீண்டும் சுமத்தியுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி எப்போதுமே சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களுக்காக பாடுபடக்கூடியது என்றும், இதனை ஒருபோதும் மறக்கக்கூடாது என்றும் கூறினார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports