ஏமாற்றும் எஸ்.எம்.எஸ்., முன்னோடி வங்கி எச்சரிக்கை

பரிசு விழுந்ததாக போலி எஸ்.எம்.எஸ்.,களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தனி நபர்கள் சிலர் பொய்யான அறிவிப்பு மூலம் லாட்டரியில் பரிசு விழுந்ததாகவும், வெளிநாடுகளிலிருந்து பரிசு அனுப்புவதாகவும், வெளிநாடுகளில் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாகவும், பொய்யான எஸ்.எம்.எஸ்., தகவல்களை அனுப்புகின்றனர். இதுகுறித்து ரிஸர்வ் வங்கிக்கு அதிக புகார்கள் வந்துள்ளன.

பாரத ரிஸர்வ் வங்கி உயர் அதிகாரிகள் கையொப்பமிட்டு வழங்கியது போன்ற தோற்றமுடைய போலி சான்றிதழ்கள், கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகளையும் தபாலில் அனுப்புகின்றனர். ரிஸர்வ் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் போல நாடகமாடுகின்றனர். மக்களிடம் பல கட்டணங்களை செலுத்த வேண்டியதாக கூறி, அவர்களை குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் முதலீடு செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர் அந்தப் பணத்தை எடுத்து ஏமாற்றுகின்றனர்.

இவர்களிடம் ஏமாந்தவர்கள் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன், ஸைபர் கிரைம் போன்ற இடங்களில் புகார் தெரிவிக்கலாம். ரிஸர்வ் வங்கியின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏமாற்று அறிவிப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports