ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த மாட்டு சந்தையில் மாடுகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.

ஈரோடு மாட்டு சந்தைக்கு புளியம்பட்டி, பொள்ளாச்சி, திருப்பூர், கொடைக்கானல், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காங்கேயம், கோவை, அவினாசி, கருமத்தம்பட்டி, செங்கப்பள்ளி, கோபி, சத்தி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஜெர்சி, சிந்து, நாட்டுகிராஸ், சிந்து கிராஸ், சீமை, சுகந்தினி, செச்செப், ஃபிளாக் அண்ட் ஒயிட் ஆகிய மாடுகளும், எருமை மாட்டில் முரா, நாட்டு கிராஸ் ஆகிய ரகங்களும் வருகின்றன.தமிழகத்தில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் மாடுகளுக்கான தீவனம் கிடைக்க துவங்கி உள்ளது. மாடு விற்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைய துவங்கி உள்ளது. சென்ற வாரத்தில் கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 1,000 மாடுகள், எருமைகள் வரத்தானது. தீவனம் கிடைக்க துவங்கி உள்ளதால் நேற்றைய மாட்டு சந்தைக்கு மாடு வரத்து வெகுவாக குறைந்தது.

வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தீவன தட்டுப்பாடு காரணமாக மாடுகள் அதிகளவில் விற்கப்பட்டன. தமிழகத்தில் சில நாட்களாக பெய்த மழையால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைக்கிறது.மாட்டு சந்தைக்கு 450 மாடுகள், 350க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. மாடுகளின் விலையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. பசு மாடு 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், எருமை மாடு 13 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports