நாமக்கல்லில் செம்மை நெல் சாகுபடி சிறப்பு தகவல் மையம்

"நாமக்கல மாவட்டம் பள்ளிபாளையம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செம்மை நெல் சாகுபடி முறைகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தகவல் மையம் இன்று முதல் செயல்பட உள்ளது' என, வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிபாளையம் வட்டாரத்தில் செம்மை நெல் சாகுபடி திட்டம் துவங்கப்பட்டு, அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

சென்ற ஆண்டு 100 இடங்களில் ஒரு நாற்று நடவு செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டு அதிக நெல்விøளைச்சல் பெறப்பட்டது. அதுபோல் இந்தாண்டு பள்ளிபாளையம் பகுதியில் இத்திட்டம் செயல்பட வேளாண் அலுவலர் கவிதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதுபோல் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில், சிறப்பு தகவல் மையம் துணை வேளாண் அலுவலர் ஞானபிரகாசம் தலைமையில் இன்று முதல் செயல்பட உள்ளது.அலுவலக வேலை நாட்களில் விவசாயிகள் நேரில் தகவல் மையத்தை அணுகி தொழில் நுட்ப ஆலோசனை பெறலாம். நேரில் வர முடியாத விவசாயிகள் தொலைபேசி மூலம் அலுவலக எண்: 241460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தொழில் நுட்ப விவரங்களைப் பெறலாம்.

நேரில் வரும் விவசாயிகளுக்கு இலவசமாகவே தொழில் நுட்ப பிரசுரம், அடையாள அட்டை, திட்ட ஆலோசனை போன்றவை வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார். மேலும், தகவல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கருத்துக் காட்சியை நேரில் பார்த்தும் பயன்பெறலாம். செம்மை நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செயல்விளக்க திடல்கள் 50 இடங்களிலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல் விளக்க திடல்கள் 130 இடங்களிலும், ஆத்மா திட்டத்தின் கீழ் செயல்விளக்க திடல்கள் 19 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சான்று பெற்ற நெல் விதைகள் 30 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. விதை நேர்த்தி மருந்து சூடோமோனாஸ், உயிர் உரங்கள், நுண்ணாட்டச் சத்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடி திட்ட பதிவு துவங்கிவிட்டது. நெல் விதைகள் இதுவரை மூன்று மெட்ரிக் டன் வினியோகிக்கப்பட்டுள்ளது. உயிர் உரம் 1,000 பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு தேவையான விதையளவு மூன்று கிலோ மட்டும் ஒரு சென்ட் நாற்றங்கால் பரப்பு போதுமானது. நன்கு நடவு செய்த வயலினை சமன்படுத்தி 14 நாட்கள் வயது கொண்ட நாற்றினை ஒரு நாற்று நடவு முறையில், சதுர நடவு முறையில் மேலாக நடவு செய்ய வேண்டும். கோனா வீடர் என்ற களை மிதி கருவி மூலம் நட்ட 10ம் நாள் முதல் நான்கு முறை பயன்படுத்தி களைகளை மிதித்து உரமாக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இந்த சாகுபடி முறை குறித்து சந்தேகம் இருந்தால், கடந்த ஆண்டு செம்மை நெல் சாகுபடி செய்து அதிக லாபம் பெற்ற விவசாயிகளின் முகவரி, ஃபோன் எண் போன்றவற்றை பெற்று விசாரித்து, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports