விளைநிலத்துக்கு பாசன நீர் விவசாயிகளுக்கு எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 220 ஏக்கர் விளைநிலத்துக்கு பாசன நீர் செல்வது குறித்த பிரச்னையில், தாசில்தார் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மடத்துக்குளம் அருகே உள்ள மலையாண்டிபட்டணம் புதிய ஆயக்கட்டு 22/6 மடைப்பகுதியில் 340 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.

அமராவதி கால்வாய் மடைப்பகுதியில் இருந்து இரண்டு கி.மீ., நீள கிளை வாய்க்கால் வழியாக விளை நிலங்களுக்கு பாசன நீர் சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இடையில் உள்ள சில விவசாயிகள், கிளைவாய்க் காலில் பல இடத்தில் தடுப்பணை ஏற்படுத்தி பாசனநீரை தடுத்துள்ளதோடு, முறை கேடாக பல வெட்டு மடைகள் அமைத்து, தங்களது விளைநிலங்களுக்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளனர். பாசன நீர் இடையே தடுக்கப்பட்டு பல இடங்களில் கிளை வாய்க்கால் மூடப்பட்டதால், 220 ஏக்கர் விளை நிலங்கள் பல ஆண்டுகளாக காய்ந்து கிடக்கின்றன.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் புகார் மனுக்கள் கொடுத்தனர். மடத்துக்குளம் தாசில்தார் லியாகத் அலி நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், "பல இடங்களில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், பாசன நீர் வீணடிக்கப்பட்டு வருகிறது. மேல்மடை விவசாயிகள் கடை மடை விவசாயிகளுக்கு பாசன நீரை தடைசெய்வது சட்டப்படி குற்றம்.

இதற்கு தமிழ்நாடு அரணி வாய்க்கால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடை மடை பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும். இடையே, பாசன நீரை தடுக்கும் விவசாயிகளின் நிலங்களை அமராவதி ஆயக்கட்டு திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்று எச்சரித்துள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports