தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: சட்டம் அமல்

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்யும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பல் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. கடந்த ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பல் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார்.

இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது: அரசுத் துறை, சட்டசபை மற்றும் அரசு சார்ந்த துறைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களில், நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது, 20 சதவீத பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports