மலர், பழங்கள் சாகுபடிக்கு பல்வேறு உதவிகள்

மலர், பழங்கள் சாகுபடிக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சுப்பிரமணியம் அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் நல்ல மழையளவு தோட்டக்கலைப் பயிர்களின் வளர்ச்சிக்கும், புதிய பரப்பில் மா, நெல்லி போன்ற பழ மரக்கன்றுகள் நடவு செய்யவும் ஏற்றது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 300 ஹெக்டேர் புதிய பரப்பில் "மா' ஒட்டுச் செடிகள் நடவு செய்யவும், 125 ஹெக்டேர் உயர் விளைச்சல் தரும் பெரு நெல்லிச் செடிகள் புதிய பரப்பில் நடவு செய்யவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மா, நெல்லி பயிரிடும் விவசாயிகளுக்கு இரண்டாம் ஆண்டு 20 சதவீதம் கன்றுகள் வழங்கியும் மூன்றாம் ஆண்டு பத்து சதவீதம் கன்றுகள் வழங்கி பராமரிப்பு மானியமும் வழங்கப்படும். புதிய பரப்பில் தென்னந்தோப்புகளில் "கோ-கோ' பயிரிடும் விவசாயிகளுக்கு இலவசமாக கன்றுகள் வழங்கி, இயற்கை மற்றும் நீரில் கரையும் உரங்கள் வழங்கப்பட்டு மீதமுள்ள தொகை பணப்பகுதியாக வழங்கப்படும்.

வாழை உயர் விளைச்சல் ரகங்களை உரிய உயர் தொழில் நுட்பங்களை கடைபிடித்து சாகுபடி செய்யும் வாழை சாகுபடியாளருக்கு ஹெக்டேருக்கு 16 ஆயிரத்து 875 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கிழங்கு வகை மலர்களான நிலச்சம்பங்கி சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 45 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. உதிரி மலர்களான மல்லிகை, ரோஜா, செண்டுமல்லி, கனகாம்பரம் போன்ற மலர்களை சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை கடைபிடிக்கவும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. வட்டார தோட்டக்கலை இயக்குநர்களை அணுகி விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports