மானிய விலையில் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்தலாம்

மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுமாறும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 90 சதவிகித பரப்பு மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையின் போது கிடைக்கப் பெறும் மழையால் கண்மாய்கள் நிரம்பி அதன் ஆயக்கட்டுப் பகுதிகளில் பகுதி மானாவாரியாகவும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்சமயம் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்க ஆயத்தமாக முக்கிய இடுபொருளான விதைகளை வாங்கி இருப்பு வைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். வேளாண் துறையில் பல்வேறு திட்டங்கள் மூலம் மானிய விலையில் நெல் விதைகள் விநியோகிக்கப்படுகிறது.

விவசாயிகளின் நலன் கருதி சான்று பெற்ற விதைகளான ஆடுதுறை 45, ஆடுதுறை 43, ஐஆர். 36, ஆடுதுறை 39, பிபிடி ஆகிய ரகங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் விதைகளுக்கும் கிலோவிற்கு 5 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் சான்று பெற்ற நெல் விதைகளும் உரமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்று பெற்ற நெல் விதைகளுக்கும் கிலோவுக்கு 5 மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இந்த தருணத்தைப் பயன்படுத்தி சான்று பெற்ற விதைகளைப் பெற்று நல்ல மகசூல் அடையலாம்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports