இயற்கை தயாரிப்புக்கு அரசு உரிமம் கட்டாயமாக்க விவசாயிகள் கோரிக்கை

இயற்கை தயாரிப்பு பூச்சி மருந்துகளுக்கு அரசு உரிமம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:போலி மருந்து நிறுவனத்தின் உரிமையாளர், விற்பனையாளர், தயாரிப்பாளர்கள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து, உரிமம் ரத்து செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் வேளாண்துறை மூலம் சிறப்பு படை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் வேளாண் மருந்துகள், இடு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.


இயற்கை தயாரிப்பு என்ற பெயரில் யார் வேண்டுமானாலும், அனைத்து விதமான வேளாண் பயிர் ஊக்கிகள், பூஞ்சான கொல்லிகள், பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிப்பதையும், விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும். இயற்கை தயாரிப்பு என்ற பெயரில் வரும் பொருட்களை விற்பனை செய்வதற்கு, எவ்வித அரசு உரிமம் தேவையில்லை என்பதை ரத்து செய்து, 1957ம் ஆண்டு பூச்சி மருந்து சட்டத்தின் கீழ், அரசு உரிமம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports