ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உறுதி: பிரணாப் முகர்ஜி

ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்ற அரசின் முடிவில் மாற்றமில்லை என்று மத்திய நிதியமைச்சரும் மக்களவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதற்கான வழிமுறைகள் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.ஜாதிவாரி கணக்கெடுப்பை எல்லா கட்சிகளும் ஆதரித்துள்ளன. எனவே கணக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த தயக்கமும் இல்லை என்றார் அவர்.ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அரசின் வாக்குறுதி என்னவாயிற்று என மக்களவையில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு பெறும் நிலையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.அதற்கு பதிலளித்த பிரணாப், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றார்.

விரல் ரேகை பதிவு போன்ற பயோமெட்ரிக் பதிவுகளோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்றார் அவர்.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சர்களின் உயர்நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் இதற்கு அமைச்சரவைதான் அனுமதி தர வேண்டும். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports