நெல் விதைப்பில் புதிய முறை ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவு குறையும்

நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் நெல் விதைத்தால் ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவு குறையும் என வேளாண் அதிகாரிகள் யோசனை கூறினர்.

வேப்பனப்பள்ளி அருகேயுள்ள மணியாண்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு கருவி குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை செய்துக் காண்பிக்கப்பட்டது.

நபார்டு வங்கியின் உதவியுடன், இக்கிராத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமியின் வயலில் இந்நிகழ்ச்சி நடந்தது.

"நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் நடவு செய்ய கூலி ஆள்கள் தேவையில்லை. நாற்றுகள் தேவையில்லை. குறைந்த விதை அளவு கொண்டு அதிக மகசூல் பெறலாம். ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவு குறையும்' என விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்கள் எம்.என்.புத்தர், என்.தமிழ்ச்செல்வன், வேளாண் உதவி இயக்குநர் ஜெ.எட்கர் கொன்சால்வஸ், வேளாண் அலுவலர் ஆர்.சீனிவாசன், வேளாண் உதவி அலுவலர் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports