பெரியாறு அணை அருகே புதிய அணை திட்டம் ரூ.380 கோடியில் மதிப்பீடு - தமிழக விவசாயிகள் கலக்கம்

பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுமானப் பணிகளுக்காக 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீட்டை கேரள பொறியாளர்கள் குழு தயார் செய்து, கேரள அரசிடம் நேற்று (ஆக. 30) சமர்ப்பித்தனர். இதனால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சர்வே பணியை கேரள அரசு அண்மையில் செய்து முடித்தது. அதன்பின் புதிய அணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாறைகளின் தன்மை குறித்து அறிவதற்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து ஆய்வு நடத்தியது. இது தவிர மண் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தது. இந்நிலையில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணியை இரண்டு வாரங்களுக்கு முன் துவக்கியது.

பத்து இடங்களில் பாறைத்துகள்களை மாதிரி எடுத்து ஆய்வு செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, புதிய அணை கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டை கேரள பொறியாளர் ஆய்வுக் குழுவினர் கடந்த சில தினங்களாக தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.


380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்டுவதற்கான திட்டத்தை தயார் செய்து முடித்துள்ளனர். "புதிய அணையின் நீளம் 700 மீட்டர், அகலம் 7 மீட்டர், உயரம் பவுண்டேஷனில் இருந்து 54 மீட்டர் ஆகவும் இருக்கும். அணையில் நீர் வெளியேறும் வகையில் 22 ஷட்டர்கள் அமைக்கப்படும்' என அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த திட்ட அறிக்கையை தயாரித்த கேரள பொறியாளர் ஆய்வுக்குழு, நேற்று ஐ.டி.ஆர்.பி., தலைமை பொறியாளர் மூலம் கேரள அரசிடம் சமர்பித்தனர். பெரியாறு புலிகள் சரணாலயமாக உள்ள அடர்ந்த வனப்பகுதியில் புதிய அணை கட்ட முடியுமா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில், திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி வரை கேரள அரசு முடித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports