3 ஆயிரம் பேருக்கு பனை ஏறும் பயிற்சி

தமிழகத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பனை மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவையிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உதவியோடு நவீன கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படும். பனை ஏறும் தொழிலாளர்கள் இந்த தொழில்நுட்பக் கருவிகள் மூலம் எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் பனை மரம் ஏறி தொழில் செய்யலாம்.

3,000 தொழிலாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports