237 ஆண்டுகளுக்குப் பின் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் 15 வயது மாணவர்!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 237 ஆண்டுகளுக்குப் பின்னர், பள்ளிக்கே செல்லாத 15 வயதாகும் ஆரன் பெர்னாண்டஸ் கணித பட்டப்படிப்பில் சேருகிறார்.

1773-ல் 14 வயதான வில்லியம் பிட் என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இளம் வயது மாணவர் என்ற பெருமையைச் பெற்றார். அவரைத் தொடர்ந்து 237 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரன் பெர்னாண்டஸ் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் அடுத்த மாதம் சேரவிருக்கும் அவர், உலகின் மிக கடினமான கணிதப் பாடத்திட்டம் என்று கருதப்படும் "திரிபோஸ்' பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.

சர் ஐசக் நியூட்டன், ஸ்டீபன் ஹாகிங் உள்ளிட்ட பிரபலங்கள் பயின்ற அந்தப் பாடத் திட்டம் கணித உலகில் "புரியாத புதிர்' என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பாடத்திட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாக ஆரன் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

முதலாண்டு பாடங்கள் அனைத்தையும் படித்து விட்டதாகவும், அவை மிக மிக எளிதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தந்தை நீலிடம் கல்வி பயின்று வரும் அவர், 5 வயதிலேயே ஜிசிஎஸ்இ எனப்படும் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார். இந்தத் தேர்வு 14 முதல் 16 வயதுக்குள்பட்டவர்களுக்கானது.

ஆரனின் அறிவுத்திறனைப் பார்த்து வியந்து, 14 வயதிலேயே அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கப்பட்டு விட்டது. இப்போது பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் கணிதப் பட்டப்படிப்பில் அவர் சேர்க்கப்படுகிறார்.

கணிதம் மட்டுமன்றி பறவைகள் ஆராய்ச்சி, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றிலும் ஆரனுக்கு அதிக ஆர்வம். விடுமுறையில் பறவைகள் ஆராய்ச்சி குழுவில் ஐக்கியமாகி விடுவார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறித்து ஆய்வுப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports