அனுமதி பெறாத பூச்சி மருந்து 12 உரக்கடைகளுக்கு தடை

தனியார் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் உதவி இயக்குனர்கள் திடீர் ஆய்வு செய்து, 12 கடைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பூச்சி மருந்து கண்டறிந்தனர். மேலும், அக்கடைகளில் பூச்சி மருந்து விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி வேளாண் இணை இயக்குனர் பிரபாகரன் மேற்பார்வையில் வேளாண் உதவி இயக்குனர்கள் முரளிதரன், துரைசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை வட்டாரங்களில் உள்ள பூச்சி மருந்து கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வின்போது பூச்சி மருந்து கடைகளின் உரிமம், இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், முதன்மைச் சான்று ஆகியவை சரிபார்க்கப்பட்டது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports