விதை உற்பத்தியாளருக்கு ஸ்டேட் வங்கியில் சலுகை

தாராபுரம்: தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்க கூட்டம் நடந்தது.கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் பேசியதாவது:விவசாயிகள், நெல் அரவை ஆலைகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் நலன் கருதி பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிகள் கடன் கொடுக்கும் முன், நீங்கள் என்ன தொழில் துவங்குகிறீர்கள்; இப்பகுதியில் லாபகரமான தொழிலாக இருக்குமா; தொழில் திட்ட வரையறைக்கு தேவையான முன் தொகை, உற்பத்தி, பொருட்கள் பயன்பாடு குறித்து நுண்ணறிவு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும். பாரத ஸ்டேட் வங்கி எட்டு சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது.ஒரு சில திட்டங்களில் கடன் பெற்றவர்கள் ஓராண்டு வரை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளோம்.


முறையாக கடனை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மொத்த கடன் தொகையில் ஒரு சதவீதம் திரும்ப வழங்கப்படுகிறது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாய கருவிகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விதை உற்பத்தியாளர் சங்க தலைவர் மகுடபதி முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் வேலுசாமி வரவேற்றார். கோவை ஏ.ஜி.எம்., ரவீந்திரன், வங்கியின் சேவை திட்டங்கள் குறித்து பேசினர். கிளை மேலாளர் பழனிச்சாமி நன்றி கூறினர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports