தேயிலை ஏல மையத்தில் தொடருது விலை சரிவு: கை கொடுக்கவில்லை உள்நாட்டு வர்த்தகம்

குன்னூர் தேயிலை ஏல மையத்தில், விலை சரிவு தொடர்கிறது; உள்நாட்டு வர்த்தகம் கை கொடுக்காததால், வரத்து குறைந்தும் விலை உயரவில்லை.குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை எண் 21க்கான ஏலம் நடத்தப்பட்டது; மொத்தம் 15.42 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு தயாராக இருந்தது. இலை ரகம் 9.85 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 5.57 லட்சம் கிலோ அடங்கும். உள்நாட்டு வர்த்தகத்தை பொறுத்தவரை வழக்கமாக பங்கெடுக்கும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப் மாநில வர்த்தகர்களின் பங்களிப்பு இந்த வாரமும் குறைவாகவே இருந்தது.ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை பாகிஸ்தான், ரஷ்யா நாட்டு வர்த்தகர்கள், ஓரளவு தேயிலைத் தூளை வாங்கினர். உள்நாட்டு வர்த்தகம் கை கொடுக்காததால், விற்பனைக்கு வந்த தூளில் 33 சதவீதம் தேங்கியது. சி.டி.சி., ரகத்தில், தர்மோனா தொழிற்சாலை வழங்கிய தூளுக்கு, அதிகபட்சம் கிலோவுக்கு 141 ரூபாய் விலை கிடைத்தது; 65க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் 100 ரூபாய்க்கு மேல் விலை பெற்றன. ஆர்தோடக்ஸ் ரகத்தில், சாம்ராஜ் தேயிலைத் தொழிற்சாலை வழங்கிய தூளுக்கு 173 ரூபாய் விலை கிடைத்தது; 15க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் 100 ரூபாய்க்கு மேல் விலை பெற்றன.

விலை நிலவரத்தை பொறுத்தவரை, இலை ரகத்தில், சாதாரண ரக தூளின் விலை 43-47, சிறந்த ரக தூளின் விலை 80 - 110 ரூபாயாக இருந்தது; டஸ்ட் ரகத்தில், சாதாரண ரக தூளின் விலை 42 - 48, சிறந்த ரக தூளின் விலை 90- 130 ரூபாயாக இருந்தது. விற்பனை எண் 22க்கான ஏலம், வரும் 3,4ம் தேதிகளில் நடத்தப்படுகிறது; 13.09 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இலை ரகம் 8.62 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 4.47 லட்சம் கிலோ அடங்கும். இது, கடந்த ஏலத்தை விட 1.33 லட்சம் கிலோ குறைவு. ஏலத்தில் விற்கப்படும் தேயிலைத் தூளின் குறைந்தபட்ச விலை, கிலோவுக்கு 60 ரூபாயில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது 43 ரூபாயாக குறைந்துள்ளது. குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் தான் விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு வார விலை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், இந்த வாரம் விவசாயிகள் வழங்கிய பசுந்தேயிலைக்கு 7.50 - 8.50 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports