தேனி:மானாவாரி விவசாயிகளுக்கு மானியத்தில் பூச்சி மருந்து

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டாரத்தில் உள்ள மானவாரி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக மருந்து மற்றும் உரங்கள் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றன.

க.மயிலை வட்டாராத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானவாரி விவசாய நிலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை மூலம் மானவாரி விவசாய நிலங்களுக்கு கொட்டை முந்திரி, கோகோ, நெல்லி போன்ற கன்றுகள் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றன. கன்றுகளை நடும் விவசாயிகளுக்கு உரங்கள் மற்றும் மருந்துகள் மானியமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா மற்றும் இரண்டு போட்டோவுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு துணை உதவி இயக்குனர் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports