பலத்த காற்றுடன் மழை: கரும்பு பயிர் சேதம்

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் கரும்பு பயிர் சேதமடைந்ததது.

தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த வாரம் பரவலாக நல்ல மழை பெய்தது. அப் போது பலத்த காற்று அடித் ததால் பல நூறு ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் உடைந்து தரையில் சாய்ந்து சேதமடைந்தது. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் கிணற்று நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில் மின்பற்றாக் குறை காரணமாக குறித்த நேரத்தில் கரும்புக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். பல பிரச்னைகளையும் சமாளித்து கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்த நிலையில் பலத்த காற் றால் பயிர்கள் சாய்ந்து சேமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தண்டுவளரும் பருவத்தில் கரும்புபயிர்கள் ஒடிந்ததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பலத்த காற்றுடன் பெய்த மழை தியாகதுருகம் பகுதி கரும்பு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports