பயிர்க் காப்பீடு இழப்பீடு இறுதித் தவணை விடுவிப்பு


தஞ்சாவூர்,​​பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் மத்திய அரசின் பங்கிற்கான இறுதித் தவணை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.​ ​ இதுகுறித்து இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.​ பழனியப்பன் புதன்கிழமை தெரிவித்தது:​ ​ 2008-2009 சம்பா-​ தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்த 69,224 விவசாயிகளுக்கு ரூ.​ 82.58 கோடி இழப்பீட்டுத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.​ ​​ ​ ​ இதில் மாநில அரசின் பங்குத் தொகையான 50 சதம் முதல் தவணையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.​ மத்திய அரசின் பங்கான 50 சதத்தில் முதல் தவணையாக 25 சதமும்,​​ இரண்டாம் தவணையாக 15 சதமும் வழங்கப்பட்டது.​ மீதமுள்ள 10 சதமான ரூ.​ 8.2 கோடியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது.​ ​ இதற்கான காசோலை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ ஓரிரு நாளில் இவை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.​ ​​ ​ கடந்த ஆண்டு மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை மே மாதம் இறுதியில் வழங்கப்படும்.​ இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் பழனியப்பன்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports