குறைந்த விலைக்கு பதனீர் கொள்முதல்: விவசாயிகள் விரக்தி

பதனீர் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு அறிவித்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் குறைவான விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால், பனை விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.ஸ்ரீவி., சுற்றுப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பனைமரங்கள் உள்ளன.


இவற்றை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது பதனீர் இறக்கும் தொழில் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீவி.,யில் இயங்கும் மதுரை, விருதுநகர் திண்டுக்கல் மாவட்ட பனை வெல்ல விற்பனை கூட்டுறவுசங்கம், தமிழ்நாடு மாநில பனை வெல்லம்,தும்பு விற்பனை மைய ஊழியர்கள், பனை மர காடுகளுக்கு நேரிடையாக சென்று பதனீர் கொள் முதல் செய்கின்றனர். பின் அதை பதப்படுத்தி பாலீத்தீன் பாக்கெட்டுகளில் நிரப்பி விருதுநகர், மதுரை, கோவில்பட்டி உட்பட பல இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.இந்தாண்டு பதனீர் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாயாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கூட்டுறவு சங்கங்கள் 6.50 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றன.


காடுகளுக்கே சென்று நேரிடையாக கொள்முதல் செய்வதால் ஏற்படும் செலவை ஈடுகட்டவும், இருதரப்பிற்கும் நஷ்டம் ஏற்படாத தொகைக்கு பதனீர் கொள்முதல் செய்யப்படுவதாக கூட்டுறவு ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பனை விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports