நேரடி நெல் கொள்முதல்செய்யாதது ஏன்?குறைதீர்வில் விவசாயிகள் வெளிநடப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து தாலுகா குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.செய்யாறு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்.டி.ஓ. சாந்தகுமாரி தலைமையில் நடந்தது. தாசில்தார் லலிதா வரவேற்றார். இதில், வருவாய்த்துறை மற்றும் பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.செய்யாறு மார்க்கெட் கமிட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் திடீரென இந்த கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.பின்னர், மார்க்கெட் கமிட்டியில் நெல் இருப்பு வைத்து விவசாயிகள் பொருள் ஈட்டுக்கடன் வசதி பெறும் வகையில் கூடுதல் கிடங்கு அமைக்க வேண்டும். செய்யாறு அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தஅழுத்த நோய் சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports