தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களைக் கட்டுப்பாட்டு பிரிவுக்கு சிறந்த மையத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் களைக் கட்டுப்பாட்டு பிரிவுக்கு சிறந்த மையத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் அங்கமான ஜபல்பூரில் உள்ள களை அறிவியலுக்கான தேசிய இயக்ககம் இவ் விருதை வழங்கியுள்ளது.

​ ரெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய ஒருங்கிணைந்த திட்ட ஆய்வு கருத்தரங்கில் விருது வழங்கப்பட்டது.​ வேளாண் பல்கலை.யின் களை கட்டுப்பாட்டு ஆராய்ச்சிப் பிரிவு முதன்மை ஆராய்ச்சியாளர் சி.சின்னுசாமி இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.​ ​ பல்வேறு நச்சுத் தன்மையுடைய களைகளைப் பற்றி ஆய்வு செய்து ஒருங்கிணைந்த ​

களை நிர்வாக முறைகளைக் கண்டறிந்துள்ளது.​ குறிப்பாக பிரச்னைக்குரிய களைகளான கண்டங்கத்தரி,​​ பார்த்தீனியம்,​​ ஆகாயத்தாமரை ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கான மேலாண்மை முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports