நீர் பற்றாக்குறையால் நெல்லில் இருந்து பயறுக்கு சாகுபடிக்கு மாறும் விவசாயிகள்

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இரண்டாம் போகமாக நெல், பருத்தி பயிரிடுவதற்கு பதிலாக பயறுவகை சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளதால், அதன் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. ராஜபாளையத்தில் வட கிழக்கு பருவ மழையையொட்டி செய்யப்படும் முதல் போக நெல் சாகுபடிக்கு பின், தண்ணீர் இருப்பை பொறுத்து, பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததாலும், பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சியாலும், பருத்தி சாகுபடியை விவசாயிகள் விரும்புவதில்லை. நடப்பு பருவத்தில், கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், பலரும் உளுந்து உள்ளிட்ட பயறு வகை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு 250 எக்டேரில் மட்டுமே பயரிடப்பட்ட உளுந்து உள்ளிட்ட பயிர்கள், நடப்பாண்டில் 500 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுவரை 3 டன் உளுந்து விதை விற்பனையாகி உள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports