பருத்தி வரத்து குறைவு: ரூ.17 லட்சத்துக்கு ஏலம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 1,200 மூட்டைகள் வரத்தாக இருந்தன. இது, கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.1,400 மூட்டைகள் குறைவு. வரத்து குறைந்துள்ள நிலையில், அனைத்து ரக பருத்தி விலையும் குறைந்துள்ளது.பருத்தி விலை விபரம் (குவிண்டாலுக்கு) வருமாறு:எல்.ஆர்.ஏ., ரூ.2,600 முதல் ரூ.3,100 வரை, ஆர்.சி.எச்., மற்றும் பென்னி ரூ.2,800 முதல் ரூ.3,350 வரை, டி.சி.எச்., ரூ.3,600 முதல் ரூ.4,400 வரை, மட்டம் ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை.அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்க தனி அலுவலர் பழனிசாமி கூறியதாவது:இந்த வாரம், கடந்த வாரத்தை விட வரத்து குறைந் துள்ளது.

விவசாயிகள், தாங்கள் இருப்பு வைத்த பருத்தியை மட்டும் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.புதிய பருத்தி ஏதும் இல்லாததால், வரத்து குறை கிறது. இந்த வார ஏலத்தில், எல்.ஆர்.ஏ., குவிண் டாலுக்கு ரூ.300, ஆர்.சி.எச்., மற்றும் பென்னி ரகங்கள் ரூ.200, டி.சி.எச்., ரகம் ரூ.350 குறைந்தது.திண்டுக்கல் புதுப்பட்டி, தர்மபுரி பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்திருந் தனர். ரூ.17.15 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports