ஒட்டன்சத்திரத்தில் வெங்காய விலை சரிவு பட்டறைகளில் சேமிக்கும் விவசாயிகள்ஒட்டன்சத்திரம் : விலை குறைந்து வருவதால் அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் மூங்கில் பட்டறையில் வைத்து ஒட்டன்சத்திரம் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நடவின் போது விதை வெங்காயம் விலை உயர்ந்திருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயிகள் நட்டனர். நடவின் போது வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. மகசூலின் போது நல்ல விலை கிடைக்கும் என்று எண்ணத்தில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அதிகம் பயிரிட்டனர்.எதிர்பார்ப்பிற்கு மாறாக வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக கிலோ 10 ரூபாய்க்கும் கீழ் விற்கிறது.நடவின் போது விதை வெங்காயம் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறையினால் அதிக விலை கொடுக்க வேண்டி உள்ளது உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது விற்கும் விலையானது வெங்காயத்தை பறித்தெடுக்கும் கூலிக்குக் கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.அதிகம் பாதிப்பு வரும் என்று உணர்ந்த விவசாயிகள் சிலர் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை அதற்கென்று தயார் செய்யப்பட்ட மூங்கில் பட்டறைகளில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports