துவரை,பாசிப்பயறு விலை உயர்வு உளுந்து, சர்க்கரை விலை சரிவுவிருதுநகரில் துவரை விலை மூடைக்கு 100 ரூபாயும்,பாசிப்பயறு 200 ரூபாயும் உயர்ந்துள்ளது. உளுந்து விலை 100 ரூபாயும், சர்க்கரை 35 ரூபாயும் குறைந்துள்ளது.

விருதுநகரில் கடந்த வாரம் துவரை விலை மூடைக்கு 4,300 ரூபாயிலிருந்து 4,400 வரை இருந்தது. தற்போது 4,400 ரூபாயிலிருந்து 4,500 வரை உள்ளது. பொடி துவரை 3,200 லிருந்து 3,300 ரூபாய் வரையும்,6,000 ரூபாயாக இருந்த துவரம் பருப்பு 6,100 ஆகவும், துவரம் பருப்பு நாடு 5,000 ரூபாயாகவும் உள்ளது. 4,700 ரூபாயாக இருந்த உளுந்து 4,600 ஆகவும், பர்மா உளுந்து 4,200 ஆகவும், பொடி உளுந்து 4,000 ரூபாயாகவும் உள்ளது. 5,500 ரூபாயிலிருந்து 5,600 வரை இருந்த பாசிப்பயறு நாடு 5,700 லிருந்து 5,800 வரையும்,7,300 ஆக இருந்த பாசிப்பருப்பு 7,500 ரூபாயாகவும் உள்ளது.

பருப்பு : பயறு வியாபாரம் மந்தமாக இருந்தது. வியாபாரிகள் ஏப்ரல் முதல் தேதி புதுக்கணக்கு போடஇருப்பதால் பருப்பு,பயறு வகைகளை கொள் முதல் செய்யவில்லை. இதனால் உளுந்து விலை குறைந்துள்ளது.பாசிப்பயறு,துவரை,துவரம் பருப்புக்கு தட்டுப்பாடுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.சர்க்கரை: விருதுநகரில் கடந்த வாரம் சர்க்கரை விலை மூடைக்கு 3,275 ரூபாயாக இருந்தது. தற்போது 3,240 ரூபாயாகவும், மைதா,ரவை மூடைக்கு தலா 2,170 ரூபாயாகவும் உள்ளது

.சர்க்கரை வியாபாரம் விறுவிறுப்பில்லாததால்சர்க்கரைவிலை மூடைக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது.எண்ணெய்: விருதுநகரில் கடந்த வாரம் கடலெண்ணெய் விலை டின்னுக்கு 1,000 ரூபாயாக இருந்தது. தற்போது 1,020 ரூபாயாகவும், சூரியகாந்தி எண்ணெய் 860 ஆகவும், பாமாயில் 660 ரூபாயாகவும் உள்ளது. நிலக்கடலைப்பருப்பு விலை 3,100 ரூபாயாகவும், 2,550 ஆக இருந்த கடலைப்புண்ணாக்கு 2,500 ரூபாயாகவும் உள்ளது.விருதுநகரில் எண்ணெய் வியாபாரமும் விறுவிறுப்பில்லாமல் மந்தமாகவே இருந்தது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports