வெள்ளாடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.18 லட்சம்: துணைவேந்தர் தகவல்கிராமப்புற பெண்களுக்கு வெள்ளாடு வழங்கும் சிறப்பு முகாம், திருப்பூர் கால்நடை மருத்துவமனையில் நேற்று நடந்தது. கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை சார்பில் ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் உதவியுடன் இலவச வெள்ளாடுகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டன.

இத்திட்டத்தில், மாவட்டம் முழுவதும் இதுவரை 503 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. காரமடையை அடுத்த பொன்னேரி, ஆலங்கட்டி, ஆலங்கட்டிபுதூர், தீங்குளி ஆகிய பகுதிகளைச் சார்ந்த மலைவாழ் பெண்களுக்கு 50 வெள்ளாடுகள் நேற்று வழங்கப்பட்டன. இத்திட்டத்துக்கு கால்நடை பல்கலையில் இருந்து 18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, கோவை கால்நடை பல்கலை துணைவேந்தர் தங்கராஜ் தெரிவித்தார். இத்தொகையை பயன் படுத்தி, அடுத்த மூன்று மாதங்களில் 350 பேருக்கு வெள்ளாடு, 100 ஏழை பண்களுக்கு கோழிகள் வழங்கப்பட உள்ளன. திருப்பூர் மாவட்ட கால்நடை துறை மண்டல இயக்குனர் (பொ) மகேந்திரன், உதவி இயக்குனர் பிரான்சிஸ் சாமுவேல் மோகன், கால்நடை பல்கலை தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports