கம்பம் நிலக்கடலை விவசாயிகள் கவனத்திற்கு

நிலக்கடலை விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம், 50 சதவீத மானிய விலையில் விற்கப்படுவதாக தெனி மாவட்டம் கம்பம் விவசாயத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராமராஜ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: இறவை மற்றும் மானாவாரியில் நிலக்கடலை கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையின் கூடுதல் மகசூலுக்கு ஜிப்சம் அவசியம் இட வேண்டும். ஜிப்சம் ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ விவசாயத்துறை மூலம் விற்பனை செய்கிறோம். 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் விற்பனை செய்யப்படுகிறது. எட்டு மூடைகளுக்கு 750 ரூபாய் மானியமாக கிடைக்கும்.பாசிப்பயறுக்கு கிலோவிற்கு 20 ரூபாய் மானியமாக வழங்குகிறோம். ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ பாசிப்பயறு பெற்றுக் கொள்ளலாம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லுக்கு ஜிங் சல்பேட் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ முழு விலை ரூ. 33.80 பைசா. அதில் 50 சதவீத மானியம் போக கிலோ ரூ. 16.90 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவையான அளவு இருப்பு கம்பம் விவசாயத்துறை அலுவலகத்தில் உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports