தரிசாக மாறும் விவசாய நிலம் : காய்கறி விலை உயர்வு

கொடக்கானல் பகுதியில் நிரந்தர தண்ணீர் வசதி இல்லாததால், மலை கிராமங்களிலுள்ள பெரும்பாலான நிலங்கள் தரிசாகவும், புதர்கள் மண்டியும் கிடக்கிறது. இதனால் காய் கறிகள் விலை உயர்ந்து வருகிறது. மலைகிராமமக்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்துவருகிறது. நிரந்த குடிநீர் தேக்கங்கள் இல்லாததால், ஆங்காங்கே நீரோடைகளில் வரும் தண்ணீரை "பைப்' மூலம் கொண்டு வந்து, தேவையை பூர்த்திசெய்தனர். ஆண்டுக்கு சராசரியாக ஆயிரத்து 660 மி.மீ., மழையளவு இருக்கும். சிலஆண்டுகளாகவே ஆயிரத்திற்கும் குறைவாக மழை பெய்துவருகிறது. நீர்ஓடைகளில் வரும் தண்ணீரும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளால் தடுக் கப்படுகிறது. கூலியாட்களின் சம்பள உயர்வு காரணமாக தற்போது 60 சதவீதம் வரைகாய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. கிடைத்த வரை லாபம் என "ரியல் எஸ்டேட்' உகந்ததாக நிலங்களை விவசாயிகள் மாற்றிவருகின்றனர். விவசாயிகளின் நலனிலும் அக்கறை காட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports