மானாவாரி நிலத்தில் ஓமம் பயிர் : சிறுபாக்கம் விவசாயி புதிய முயற்சி

மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் மூலிகை பயிரான ஓமத்தை, தற்போது கடலூர் மாவ்ட்டம் சிறுபாக்கத்தில் விவசாயி ஒருவர் மானாவாரி நிலத்தில் பயிரிட்டுள்ளார். செழித்து வளர்ந்துள்ள ஓமம் பயிரினால் அப்பகுதி நறுமணம் வீசுகிறது.
மூலிகை பயிரான ஓமம் மேற்கு தொடர்ச்சி மலை பிரதேசமான தேனி, கம்பம், போடி பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. காரணம் ஓமம் சாரலில் வளரக்கூடியது. பனிப் பொழிவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிக மகசூல் கிடைக்கும். இந்நிலையில் சிறுபாக்கத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் புதிய முயற்சியாக தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் மானாவாரி நிலத்தில் ஓமம் பயிரிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலகு ரக பயிரான ஓமம் குறைந்த முதலீட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் பரிட்சாத்தமாக ஓமம் பயிட முடிவு செய்தேன். சாரலில் வளரும் பயிர் என்பதால், பயிர் செய்திடும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்த்து, அண்மையில் பெய்த சாரல் மழை மற்றும் தற்போது பெய்து வரும் பனி பொழிவை கொண்டே பயிரிட்டுள்ளேன். பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் நறுமணம் வீசுகிறது. எனது நிலத்தை கடந்து செல்பவர்கள் ஆச்சரியமாக ஓமம் பயிரை பார்த்து செல்கின்றனர். இதன் மகசூலை பொறுத்தே வரும் காலத்தில் ஓமம் பயிரிடுவதை முடிவு செய்ய உள்ளேன் என்றார்.
மூலிகை பயிரான ஓமம் மானாவாரி நிலத்தில் பயிரிட்டுள்ளதை அறிந்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயி மணிகண்டன் நிலத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். மேலும் இவருக்கு மானியம் வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports