காகித உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கு புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்ப்பு: அரசுக்கு கோரிக்கை

காகித உற்பத்தித்தொழில் வளர்ச்சி பெற,​​ புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க அரசு நீண்ட கால குத்தகை அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய காகிதக் கூழ் மற்றும் காகித தொழில்நுட்ப சங்கத்தின் ​(ஐ.பி.பி.டி.ஏ.)​ தலைவர் என்.பி.​ பிரபு மற்றும் சேஷசாயி பேப்பர் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கே.எஸ்.​ காசி விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:காகித உற்பத்தியில் 15}வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவுக்கு அடுத்தபடியாக 2}வது இடத்தைப் பெறும்.​ இந்திய காகித ஆலைகளின் உற்பத்தித் திறன் 93 லட்சம் டன்.​ இதில் 89 லட்சம் டன் அளவு காகிதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.நாட்டில் ஆண்டுதோறும் காகித விற்பனை அளவு ரூ.​ 25 ஆயிரம் கோடி ஆகும்.​ இந்தத் தொழில் மூலம் 5 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும்,​​ 11 லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.காகிதத்தின் தேவை அதிகரித்து வருவதால்,​​ அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் மொத்த காகித உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும்.​ இதற்காக ரூ.​ 10 ஆயிரம் கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.​ செய்தித்தாள் காகிதத்தில் 60 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது.தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி:​​ காகிதத் தொழிலுக்கு இப்போது உள்ள நெருக்கடியான பிரச்னை நார் நிறைந்த கச்சாப் பொருள்கள் பற்றாக்குறை ஆகும்.​ இதற்காக புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க காகித ஆலைகளுக்கு நீண்டகால ஒப்பந்த அனுமதியை அரசு வழங்க வேண்டும்.​ இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.​ காகிதத் தொழில் வளர்ச்சி பெற தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.​ இன்று கருத்தரங்கு:​​ காகிதத் தொழில் எதிர்நோக்க உள்ள பல்வேறு சவால்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராயநகரில் உள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் 5,​ 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.இந்தக் கருத்தரங்கில் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports