மானிய விலையில் இடுபொருட்கள் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.
இது குறித்து மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மங்களூர், திட்டக்குடி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையத்தில் டி-9 உளுந்து, டி.எம்.வி- 2 மணிலா சான்று பெற்ற விதைகள், அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள், அஸாடிராக்ஷன், பயோலெப் போன்ற தாவர பூச்சிக்கொல்லிகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் ஜிப்சம் ஆகியவை இருப்பு வைக்கப் பட்டு 50 சதவீத மானிய விலையில் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports