ஆள் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவடை

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியத்தில் தமதமாக சாகுபடி செய்த நெல் விவசாயிகள், அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.
வழக்கமாக ஆடி, ஆவணியில் விதைத்து, தையில் அறுவடை செய்வர். கடந்த ஆண்டு பருவ மழை காலம் தவறி பெய்ததது. இதனால், கிணறு பாசனம் செய்வோர் மட்டுமே உரிய காலத்தில் பயிரிட்டனர். மற்றவர்கள் மழையை நம்பி, தாமதமாக சாகுபடி செய்தனர். மருதங்குடி, பிள்ளையார்பட்டி, சிறுகூடல்பட்டி, வைரவன்பட்டி, சுற்றுப்பகுதிகளில், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர் உள்ளது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால், அறுவடை செய்ய முடியவில்லை. ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கு பலர் சென்று விடுவதால், பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
மகசூல் குறைவு, கூலியும் அதிகரித்ததுடன், ஆட்கள் கிடைப்பதும் அரிதாக வருகிறது. வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்வதே அரிதானது. இதில் அதிகரித்து வரும் பிரச்னைகளால் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது. இதனால் இந்தாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் வழக்கமான விளைச்சலைக் காட்டிலும் சுமார் 10 ஆயிரம் ஹெக். நெல் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports