பி.டி., ரக பருத்தி கருகியதாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார்தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பி.டி., ரக பருத்தி கருகியதாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரியை அடுத்த மொரப்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அமுதாவிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:பி.டி., ரக பருத்தியை பயிரிடுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என அரசு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, பயிரிட்டோம். கடந்த காலத்தில் ஓரளவு லாபம் கிடைத்தது. இதேபோல், கடந்த ஆண்டு மொரப்பூர், தாசரள்ளி, இலவடை, பொம்மிடி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட 17 கிராமங்களில் 360 விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் பி.டி., ரக பருத்தியை சாகுபடி செய்தோம். இந்த முறை செடி வளர்ந்து, காய் முளைவிட்டபோது கருகி விட்டது. புழு வெட்டும் அதிகமாக உள்ளது. இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தரமற்ற விதைகளும், உரங்களும் காரணம். ஏனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports