வேளாண்​ துறை சார்​பில் வாட​கைக்கு நெல் அறு​வடை இயந்​தி​ரம்

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்படவுள்ளது.​ ​ இது தொடர்பாக நாகர்கோவில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​​ ​ திருநெல்வேலி வேளாண்மை பொறியியல் துறையில் செயற்பொறியாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேரன்மகாதேவி ரயில்வே பீடர் ரோடு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் தென்காசி மாலிக் நகர் மலையான்தெரு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றில் நெல் அறுவடை இயந்திரம் அரசு நிர்ணயித்துள்ள தொகையில் வாடகைக்கு விடப்படுகிறது.​ ​ வாடகை ஒரு மணி நேரத்துக்கு டீசலுடன் ரூ.​ 780 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.​ ​ தேவைப்படும் விவசாயிகள் இந்த அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports