'டீசல் என்ஜின்' விவசாயிகளுக்கு ​விடிவு காலம் வருமா?திருக்கோவிலூர் பகுதியில் மின் இணைப்பு கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் பாசன பயன்பாட்டுக்கு டீசல் என்ஜினையே பயன்படுத்தி வருகின்றனர்.​ ​​ திருக்கோவிலூர்,​​ அரகண்டநல்லூர்,​​ வீரபாண்டி,​​ கண்டாச்சிபுரம்,​​ மணலூர்பேட்டை,​​ சித்தலிங்கமடம்,​​ ரிஷிவந்தியம்,​​ மூங்கில்துறைப்பட்டு,​​ வடபொன்பரப்பி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.​ ​இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெல்லும்,​​ மீதமுள்ள பகுதிகளில் கரும்பு,​​ நெல்,​​ மணிலா,​​ பருத்தி,​​ கோதுமை,​​ மக்காச்சோளம்,​​ உளுந்து உள்ளிட்ட பல பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.​ ​இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயப் பாசனக் கிணறுகள் உள்ளன.​ அதில் சுமார் 12 ஆயிரம் கிணறுகளில் மட்டுமே மின் மோட்டார் இணைப்பு உள்ளது.​ மற்ற கிணறுகளில் டீசல் என்ஜினையே பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது.​ ​தமிழக அரசு கொண்டுவந்த இலவச மின்சாரத்திட்டம் மின் மோட்டார் இணைப்புப் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது.​ ஏழை விவசாயிகள் டீசல் என்ஜினைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.​ ​மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக டீசல் என்ஜின் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தற்போது ரூ.50 ஆயிரம் செலுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாகவும்,​​ ரூ.25 ஆயிரம் செலுத்துவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.​ ​இதனால் பெருநிலக்கிழார்கள் மட்டுமே உடனடியாக பணம் செலுத்தி மின் இணைப்பைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.​ சிறு மற்றும் குறு விவசாயிகள் போதிய பண வசதியின்றி மின் இணைப்புப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.​ ​எனவே தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ அதுவரையில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப்போல் டீசல் என்ஜினை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports