விவசாயிகள் மீது போலீஸ் தடியடி-மானாமதுரையில் பதட்டம்

கடைமடை விவசாயத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனால் மானாமதுரை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

மானாமதுரை, மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலைப் பகுதியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இன்று திடீரென ஒன்று திரண்டனர்.

குறிச்சி, மேலநட்டூர், மேலபசலை, கீழபசலை ஆகிய கிராம‌ங்களில் இருந்து விவசாயிகள் ஒன்றாக திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.

வைகை அணையில் இருந்து கடைமடை விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து மறியலில் ஈடுபடுவதாக விவசாயிகள் கூறினர்.

இதையறிந்த போலீசார் மறியல் நடத்த அனுமதி மறுத்தனர். எனினும் தடையை மீறி நெடுஞ்சாலையில் மறியல் நடத்த விவசாயிகள் முற்பட்டபோது போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் விவசாயிகள் சங்க தலைவர் காசிராஜன் உட்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 2500 விவசாயிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ. குலசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports