கண்வலி கிழங்கு சாகுபடி 49 பேருக்கு மானியம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 49 பேருக்கு 31 லட்சம் ரூபாய் மருத்துவப் பயிருக்கான சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட்டது. ஈரோடு தோட்டக்கலை துணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தேசிய மருத்துவப் பயிர்கள் இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்த 49 பேருக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் நடந்த விழாவில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 49 பேருக்கு 30.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியத் தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports