நெகமம் கொப்பரை கிலோ ரூ.30.90நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 12 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 62 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப் பாளர் சண்முகம் ஏலம் நடத்தினார். முதல் தர கொப்பரை 13 மூட்டையில், கிலோவுக்கு குறைந் தபட்சம் 29.75 ரூபாய் முதல், அதிகபட்சம் 30.90 ரூபாய் வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை 49 மூட்டையில், கிலோவுக்கு குறைந்தபட்சம் 26.10 ரூபாய் முதல், அதிகபட்சம் 29.60 ரூபாய் வரை விலை கிடைத்தது. அதிகாரிகள் கூறியதாவது: வெளிமார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலை சரிந்து வருவதால், கொப்பரை வரத்து குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கொப்பரை விலை கிலோவுக்கு 35 பைசா குறைந்துள்ளது என்றனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports