நிலக்கடலை பயிருக்கு ரூ. 30 லட்சம் மானிய நிதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 லட்ச ரூபாய் மானியமாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அலி வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,600 ஹெக்டேரில் றவை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை மாத பயிரான நிலக்கடலையில் காய்கள் அதிக எடையுடையதாகவும், திரட்சியாகவும், எண்ணெய் சத்து மிகுந்ததாகவும் கிடைப்பதற்கு நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவது மிகவும் அவசியமானதாகும்.

ஜிப்சத்தில் சுண்ணாம்பு சத்து 24 சதம், கந்தக சத்து 18 சதம் உள்ளது. சுண்ணாம்புசத்து காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுள்ளதாகவும் உருவாக உதவுகிறது. கந்தக சத்து நிலக்கடலையில் எண்ணெய் சதவீதத்தை அதிகரிக்க உதவுகிறது. நிலக்கடலைபயிரில் ஜிப்சத்தை அடியுரமாக ஹெக்டேருக்கு 200 கிலோ இட வேண்டும். நிலக்கடலையில் காய்கள் உருவாகும் தருணமான விதைத்த 40 நாட்களில் ஹெக்டேருக்கு 200 கிலோ ஜிப்சம் இட்டு மண் அனைத்தல் மிகவும் அவசியமாகும்.

செடிககைள சுற்றி ஜிப்சம் இடும் போது நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். சுண்ணாம்பு சத்துள்ள நிலங்களில் ஜிப்சம் இடுவதை தவிர்க்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் விரிவாக மையங்களிலும் ஜிப்சம் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு 400 கிலோ வீதம் ஜிப்சம் இட வேண்டும் என்ற நிலையில் இதன் முழு விலையான 1,231 ரூபாயில் மானியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது.மானிய விலையில் விவசாயிகளுக்கு ஜிப்சம் வழங்க தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports