ஏலக்காய் : கிலோ 1100க்கு விற்பனை

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. மும்முரமான எடுப்பு நேரத்தில் வண்டன் மேடு, போடியில் உள்ள 8 ஈ-ஆக்சன் சென்டர்களில் வாரத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோவிற்கு மேல் விற்பனைக்கு பதிவானது. ஏலக்காய் எடுப்பு முடிந்த நிலையில் வாரத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோ பதிவு செய்யப்பட்டது.

தற்போது வரத்து குறைந்த நிலையில், பண்டிகை காலமும் முடிந்து விட்டது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர் கணிசமாக உள்ளது. ஏலக்காய் அதிகளவில் பயன் படுத்தப் படும் வட மாநிலங்களிலும் தேவை உள்ளது. ஏலக்காய் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. நடப்பு வாரத்தில் பல்க் ஆவரேஜ் ரகம் கிலோவிற்கு 950 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உள்ளது. பருவட்டு ரகங்களான 7.5 எம்.எம்., மற்றும் 8 எம்.எம்., தரத்திற்கேற்ப 1050 ரூபாய் முதல் 1100 ரூபாய்க்கு விலையில் விற்கப்படுகிறது

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports