பி.டி. கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக அவசர முடிவு எதையும் தமிழக அரசு எடுக்காது-முதல்வர் கருணாநிதி

பி.டி. கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக அவசர முடிவு எதையும் தமிழக அரசு எடுக்காது என முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார்.

அரசு சாரா அமைப்புகளான பூவுலகின் நண்பர்கள், சேஃப் புட் அலையன்ஸ், தமிழக மகளிர் கூட்டமைப்பு மற்றும் தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று (jan-27) முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர், தமிழக அரசு அனுமதி வழங்காமல் பி.டி. கத்தரிக்காய் பயிரிடவும், விற்பனை செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports