பி.டி. கத்தரிக்காய் விவகாரம்: நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை





மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சையையடுத்து வேளாண் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விஞ்ஞானிகள், சித்த மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.அனைவரது கேட்டறிந்த பின்னர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அனுமதிப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டாது என்றும் தீவிர ஆலோசனைக்குப் பின்னரே முடிவெடுக்கும் என்றும் முதல்வர் உறுதியளித்ததாகத் தெரிகிறது.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports