சிதம்பரம் :வேளாண் கருவிகள் கையாள பயிற்சி பதிவு செய்து கொள்ள அறிவிப்புவேளாண் கருவிகள் கையாள்வது குறித்த பயிற் சியில் சேர்ந்து பயனடைய தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாதபன் விடுத் துள்ள செய்திகுறிப்பு: வேளாண் பொறியியல் துறை, சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் வரும் 21ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை பவர்டில்லர் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. மேலும் மேம்படுத்தப் பட்ட பல வகையான வேளாண் கருவிகள் தெரிவு செய்தல், கையாளுதல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரையும் நடக்கிறது.
இந்த இரு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் உள்ள படித்த விவசாயிகள் பெயரை சிதம்பரம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 19ம் தேதிக்குள் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports