நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு:சந்தைப்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு:சந்தைப்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி:தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் பயிற்சி நடந்தது.தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள விரிவாக்கத் துறையில் மூன்று நாட்கள் நடக்கும் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த 35 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.கல்லூரியின் முதல்வர் (பொ) ஜேம்சன் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். மீன் உற்பத்தியிலும், அயல்நாட்டு ஏற்றுமதி வாணிபத்திலும் சிறப்பாகச் செயலாக்கம் செய்வதற்கு அலங்கார மீன் உற்பத்தி மற்றும் வளர்ப்பு சார்ந்த தொழில்கள் தற்போது உகந்த தொழிலாக இருக்கின்றன என்று கூறினார். உலகளவில் அலங்கார மீன்வளர்ப்புத் தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், அதன் தற்போதைய தேவைகளையும் பற்றி கூறினார். இந்த நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் பயிற்சியில் நன்னீர் அலங்கார மீன் வகைகள், அலங்கார மீன் தொட்டி வடிவமைத்தல், இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்தி, உணவிடும் முறைகள், அலங்கார மீன் இனப் பெருக்கம் மற்றும் வளர்ப்பு முறைகள், நீர்த்தரப் பராமரிப்பு, மீன் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் போன்ற பாடங்கள் செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கூறினார்.இக்கல்லூரி அளித்த அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி மூலம் பயனடைந்துள் பயனாளிகளில் பலர் அலங்கார மீன் பண்ணைகளை உருவாக்கி அலங்கார மீன்வளர்ப்பு உற்பத்தி தொழிலை தொடங்கி வருமானம் ஈட்டுவதோடு, ஏனைய களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.இப்பயிற்சியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் மு� ற கள் பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை மீன்வள விரிவாக்கத்துறையின் இணைப் பேராசிரியர்மற்றும் தலைவர்நாகூர்மீரான் மற்றும் இணைப்பேராசிரியர்கள் சுஜாத்குமார், சாந்தகுமார் மற்றும் உதவிப் பேராசிரியர் அருள்ஒளி ஆகியோர் செய்திருந்தனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports