மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பலமடங்கு விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

சிறுபாக்கம், வேப்பூர், மங்களூர் பகுதிகளில் நீர்ப் பாசன விவசாயிகள் தங் களது விலை நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரான பர்மா, குங்கும ரோஸ் உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிர் செய்வது வழக் கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய விலை இன்றி மரவள்ளி கிழங்கு பயிர் செய்வதை பெரும் பாலான விவசாயிகள் கைவிட்டனர். சில விவசாயிகள் மட் டும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டனர். சில மாதங்கள் முன்புவரை 100 கிலோ கிழங்கிற்கு 120 முதல் 140 ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால் ஒரு மாதமாக மரவள்ளி கிழங்கு மூட்டை எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து 650 முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகிறது. கிழங்கு உற் பத்தி குறைவால் ஆலைகளுக்கு போதிய அளவிற்கு கிழங்கு கிடைக்கவில்லை.

இதனால் சேலம், தலைவாசல், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிழங்கு ஆலை வியாபாரிகள், கிழங்கு புரோக்கர்கள் சிறுபாக்கம், மங்களூர் பகுதிகளில் முகாமிட்டு விவசாயிகளுக்கு கூடுதல் விலை கொடுத்து கிழங்கினை கொள்முதல் செய்து வருகின்றனர். கூடுதலான விலைக்கு மரவள்ளி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports