கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை

தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம், தாராபுரத்தில் நடந்தது; திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் காளிதாஸ் தலைமை வகித்தார்; மகுடபதி முன்னிலை வகித்தார்.
அதில், "கள் இறக்க அனுமதி மறுக்கும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் வரும் 21ல் கள் இறக்கும் போராட்டம் நடத்தப் படும். "டாஸ்மாக்' மதுபானங்களை விட, அன்னிய நாட்டு மதுபானங்களை விட, கள் மோசமானது என நிரூப்பித்தால் கோரிக்கையை கைவிடவும், போராட் டத்தை விலக்கிக்கொள்ளவும் தமிழ்நாடு கள் இயக்கம் தயாராக உள்ளது. தேங்காய் நாரை, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய தென்னை வாரியமும், மத்திய அரசும் உதவ வேண்டும். வேளாண் துறைக் கென தனியாக நிதி நிலை அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும்' என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports