கரூர் ஆட்சியரகத்தில் தானியங்கி வானிலை நிலையம்கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தானியங்கி வானிலை நிலையம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.​ ​ கரூர் மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 4 தானியங்கி வானிலை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.​ இதன் தொடர்ச்சியாக,​​ கரூர் ​ மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது தானியங்கி வானிலை நிலையத்தை ஆட்சியர் ஜெ.​ உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.​ ​ அப்போது,​​ அவர் கூறியது:​ ​ தமிழகத்தில் முதல்கட்டமாக 224 வட்டாரங்களில் தானியங்கி வானிலை நிலையங்களை தமிழக அரசு ரூ.1,690 லட்சத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நிறுவியுள்ளது.​ ​ இதன் மூலமாக குறுகிய கால வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதன் மூலம்,​​ பண்ணை முடிவுகளை எடுக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.​ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறுகிய கால இடைவெளியில் மழையளவைக் கண்டறியப் பயன்படுகிறது.​ புவி வெப்பமயமாதல்,​​ கால நிலை மாற்றங்களைக் கண்காணிக்க வானிலை வலையிணைப்பை உருவாக்குகிறது.​ ​ பயிர் மேலாண்மைக்குத் தேவையான காலநிலை காரணிகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் உழவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு குறையும்.​ வட்டார அளவில் தானியங்கி வானிலை நிலையங்களை அமைத்து,​​ சிறந்த வானிலை வலை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தகுந்த வானிலை சார்ந்த வேளாண் உத்திகளைக் மேற்கொண்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.​ ​ கரூர் மாவட்டத்தில் தலா ரூ.​ 6.75 லட்சத்தில் காகிதபுரம்,​​ ஆட்சியரகம்,​​ இனுங்கூர்,கணக்குபிள்ளையூர் தென்பாகம்,​​ க.பரமத்தி ஆகிய 5 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ இந்த ​ நிலையங்கள் மூலம் காற்றின் வெப்பம்,​​ ஈரப்பதம்,​​ காற்றின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை,​​ ஈரப்பத சதத்தை அளவிட முடிகிறது.​ இந்த வானிலை நிலையத்தில் மழையளவுமானி,​​ காற்றழுத்த உணர்வுமானி,காற்றின் திசைவேக உணர்வுமானி,​​ மண் வெப்பநிலை,​​ ஈரப்பத உணர்வுமானி,​​ ​(இதன் மூலமாக 15 செ.மீ ஆழம் வரை மண்ணின் வெப்பநிலை,​​ ஈரப்பதத்தை அளவிட முடியும்),​​ சூரியக் கதிரியக்க உணர்வுமானி ​(சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை கலோரி அலகில் பதிவு செய்ய),​​ இணை ஈரப்பத உணர்வுமானி ​(தாவர இலையின் ஈரப்பதத்தை பதிவு செய்ய)​ ஆகிய 10 வகையான வானிலைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.​ ​ ​ இந்தக் கருவிகள் மூலம் வானிலைத் தகவல் சேகரிக்கப்பட்டு,​​ ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் கணக்கிடப்பட்டு செயற்கைகோள் தொடர்பு மூலம் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.​ தானியங்கி வானிலை நிலையத்தின் மூலம் பதிவு செய்யப்படும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹஜ்ய்.ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய்​ என்ற இணை​யத்​தில் தெரிந்து கொள்​ள​லாம் என்றார் ஆட்சியர்.​ ​ நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முனிரத்தினம்,​​ வேளாண்மை இணை இயக்குநர் கே.​ ஜெகதீசன்,​​ துணை இயக்குநர்கள் ந.​ சண்முகம்,​​ தோட்டக் கலைத் துறை ரா.​ கந்தசாமி,​​ வேளாண்மை விற்பனைத் துறை ம.​ முத்துசாமி,​​ உதவி இயக்குநர்கள் தரக் கட்டுப்பாடு பூ.​ மதனகோபால்,​​ பி.​ செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports