சிவகங்கை:தெளிப்பு நீர் கருவிக்கு மானியம்: இணை இயக்குனர் தகவல்

நிலக்கடலை, பயறு பயிரிடும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் கருவி வழங்கப்படுகிறது. விவசாய இணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறியதாவது: கிணற்று பாசனம் மூலம் நிலக்கடலை, உளுந்து, பயறு வகைகள் நடவு செய்துள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, விளைச் சலை அதிகரிக்க வேண்டும். இதற்காக மானிய விலையில், தெளிப்பு நீர் கருவி வழங்கப்படும். இக்கருவியின் விலை 15 ஆயிரம் ரூபாய். இதில் 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

இம்மாவட்டத்திற்கு 150 கருவிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தேவைப்படும் விவசாயிகள், அந்தந்த உதவி இயக்குனர்களை அணுகலாம், என்றார்.

Admin

கருத்துரையிடுக

வேளாண்மை தகவல் ஊடகத்தின் செய்திகள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...

புதியது பழையவை

Recent in Sports